ரேபிடோவில் சென்ற ஐடி பெண் ஊழியர் கார் மோதி மரணம்!.. சென்னையில் அதிர்ச்சி...
சமீபகாலமாகவே சாலை விபத்துக்கள் அதிகரித்துவிட்டது. பைக் மற்றும் காரில் செல்பவர்களிடம் நிதானம் இல்லை. மிகவும் வேகமாக அவர்கள் வண்டியை ஓட்டுவதால் பல விபத்துக்கள் நடக்கிறது. அதில், அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கிறார்கள். இந்நிலையில்தான், சென்னையில் பைக்கில் சென்ற இளம்பெண் காரால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் கோமதி. இராமாபுரம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை பணிக்கு செல்வதற்காக ரேபிடோ பைக் புக் செய்து அதில் சென்றிருக்கிறார். வானகரம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்று பைக்கின் மீது வேகமாக மோதி விட்டு சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஓட்டியது யார் என்கிற விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சிசிடிவி கேமரா மூலம் அந்த காரின் எண்ணை கண்டறிந்த அதன் மூலம் காரை ஓட்டியவர் பற்றிய தகவலை சேகரிக்கும் முடிவில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.