கோயம்பேட்டில் கார் மோதிய சம்பவம்!. மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு!..
இலங்கையை சேர்ந்த யான்சி தனது இரண்டு தோழிகள் மற்றும் சகோதருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அதேபோல் சுமன் சக்திவேல் என்பவரும் தனது நண்பர்களுடன் அதே பாருக்கு சென்றிருக்கிறார்.
அப்போது பப்பில் நடனமாடும் போது இருவருக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் எல்லோரையும் பவுன்சர்கள் வெளியே அனுப்பி விட்டனர். யான்சி, ஒரு சிறிமி மற்றும் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கோபத்தில் இருந்த சுமன் சக்திவேல் காரில் வேகமாக வந்து யான்சி ஒட்டிய பைக்கில் வேகமாக மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சுமன் சக்திவேல் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு அந்த தனியார் பாருக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் யான்சியுடன் பைக்கில் சென்ற 17 வயதான சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்திருக்கிறார்.