மாதவிடாய்!.. மாணவியை வெயிலில் நிற்கவைத்த ஆசிரியர்!.. நடவடிக்கை பாயுமா?!..
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 11 வயது மாணவி மாணவியை மாதவிடாய் காரணம் காட்டி வகுப்பறைக்கு வெளியே பல மணி நேரம் நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதிய உணவு இடைவேளையின் போது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் கூறியிருக்கிறார். எனவே, பள்ளி முடியும் வரை அந்த மாணவி வெளியே நின்றுள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் அழுதபடியே இதுபற்றி சிறுமி சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. விசாரணை அறிக்கை கேட்டிருக்கிறேன். அறிக்கை வந்ததும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.