போலீஸ பக்கத்துல வச்சிக்கிட்டு ஒரு செம ரீல்ஸ் வீடியோவா!.. டெல்லி போராட்டத்தில் கலக்கிய Gen Z யூத்..
இன்றைய Gen Z இளைஞர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள்.. வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள்.. அவர்கள் எதையும் பெரிதாக, சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.. வாழ்க்கையை மிகவும் சுலபமாக அவர்கள் அணுகுகிறார்கள். இது அவர்களின் நடவடிக்கை மற்றும் சமூகவலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்..
அப்படி சமூகவலைத்தளங்களில் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருபவர்தான் அபினவ் பிஷித். இவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பல லட்சம் பேர் ஃபாலோ செய்துள்ளனர். சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தியாவில் பல ஊர்களில் இருந்தும் Gen Z இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்நிலையில்தான், போராட்டக் களத்திலேயே போலீசருக்கு அருகிலேயே அபினவ் பிஷி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஹீந்தி பாடலுக்கு ரியாக்ட் செய்து வெளியிட்ட வீடியோ 6.3 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும், ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இதற்கு கமெண்ட் போட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் இதை ஷேர் செய்திருக்கிறார்கள்.