1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK MLAs Forcefully Evicted From Tamil Nadu Assembly Amid Uproar

திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்.. சபாநாயகர் உத்தரவால் பரபரப்பு..!

சட்டப்பேரவை
பேரவையில் முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட சம்பவம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் நேற்றைய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக திரண்டு கோஷமிட்டனர்.
 
இதையடுத்து, திமுக கொறடா எ.வ. வேலு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமர வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
 
இதன் பின்னர், திமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டதாகவும், காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சட்டப்பேரவை நடவடிக்கையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.
 
அவையை சுமுகமாக நடத்தவிடாமல் தடுக்கும் நோக்கம் திமுக உறுப்பினர்களிடம் இருந்ததாகவும், அவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் பேரவைத் தலைவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.  
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வாரா?