1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dayanidhi maran attack cm joseph vijay

பழசெல்லாம் மறந்துபோச்சா!.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது!.. தயாநிதி மாறன் அட்டாக்!...

dayanidhi vijay
நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 60 ஆண்டு காலங்களில் திமுக செய்த ஊழல்கள் பற்றி பேசினார். சர்க்காரியா கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் கருணாநிதி லஞ்சம் வாங்கினார், அதேபோல் வீராணம் ஏரி கட்டும்போது கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் 2.5 சதவீதம் லஞ்சம் வாங்கினார்.. தவணை முறையில் அந்த பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது’ என்றும் கூறியிருந்தார்..

இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள முரசொலி மாறனின் மகன் தயாநிதி எம்பி ‘ஜனவரி 2006ம் வருடம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியிட்டு விழாவில் வருமான வரி வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி விஜயை மேடையில் ஏற்றக்கூடாது என அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்த்தார்..

அப்போது, அதை எதிர்த்து விஜயை மேடையேற்றி தபால் தலையை பெறுவதற்கான உரிமை உரிய மரியாதை பெற்று தந்தது முரசொலி மாறனின் மகன்தானே. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது படத்திற்காக ஒரு நாள் முழுவதும் காத்திருந்து வீடியோவில் கைகட்டி முனகியதையும் மறந்து விடலாகாது..

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-ல் நடந்த கொலைகளுக்கு எமர்ஜென்சி காலத்து சர்க்காரியா அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்.. தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தது சட்ட ஒழுங்கி சந்தி சிரிக்கிறது’ என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. விருப்பமனு குறித்த முக்கிய அறிவிப்பு..