1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. govt decided to buy alcohol from different companies

சரக்கு பாட்டில் வாங்குவதில் புதிய நடைமுறை!.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவு..

vijay tasmac
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனியார் வசமிருந்த மதுபான கடைகளை அரசு மயமாக மாற்றி டாஸ்மாக் என்கிற நிறுவனத்தை தொடங்கி அதன் கீழ் அனைத்து மதுபான கடைகளிலும் செயல்படுவது போல் மாற்றினார்.

டாஸ்மாக் நிறுவனத்தால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதால் அதன்பின் வந்த அரசுகளும் அதையே பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை 11 நிறுவனங்களிடமிருந்தும், பீர் வகைகளை 5 நிறுவனங்களிடமிருந்தும் டாஸ்மாக் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனம் துவங்கியது முதலே அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் நடத்தும் மதுபான நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன
. தற்போது தவெந்க ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் டாஸ்மாக் கொள்முதலில் பல மாற்றங்களை செய்ய அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த 6ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக ஆலோசனை  நடைபெற்ற போது குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிக அளவில் மதுபானங்களை செய்வதற்கு நிறுத்திவிட்டு சரிசமமாக மற்ற நிறுவனங்களிடமிருந்தும் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்கப்பட்டுள்ளது..

அதேபோல் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மது வகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், கேரளா புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கிடைப்பது போல தரமான மதுபான வகைகள் தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளிலும் கிடைக்க வேண்டும் என்பதே மதுப்பிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரு எம்.எல்.ஏவை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை.. ஜேடி பிரபாகர்...