1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk mla cricticize vijay in the assembly

வாயை திறக்காத முதல்வர்!. விஜயை கலாய்த்த திமுக!.. சட்டசபையில் அமளி!..

vijay
பொதுவாகவே முதலமைச்சர் விஜய் அதிகம் பேசும் நபர் அல்ல. தேர்தல் பிரச்சார மேடைக மற்றும் பொதுக்கூட்டத்தில் மட்டுமே அவர் ஆவேசமாக பேசுவார். மற்ற சமயங்களில் என்ன தேவையோ அதை மட்டுமே பேசும் பழக்கம் கொண்டவர் விஜய்.  ஆனால் தற்போது அவர்கள் முதலமைச்சராகி விட்ட நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அந்த வகையில்தான் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பலரும் சட்ட ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்
. முந்தைய காலகட்டங்களில் சட்டம் ஒழுங்கு சார்ந்த விவகாரங்களில் அத்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே பதில் அளிப்பார். ஆனால் திமுக எம்எல்ஏக்களின் எல்லா கேள்விகளுக்கும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் மட்டுமே பதில் அளித்தனர்.

முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். இதையடுத்து ‘என்ன நடந்தாலும் நான் வாய் திறக்க மாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதலமைச்சர். விஜய்’ என திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் நக்கலடித்தார்.

அப்போது பதில் சொன்ன ஆதவ் அர்ஜுனா ‘முதல்வருக்கு எப்போது, எங்கே பேச வேண்டும் என்பது தெரியும். அவர் திமுகவை பற்றி பேசியதால்தான் திமுக செய்த தவறுகளை மக்கள் புரிந்து கொண்டு உங்களுக்கு எதிராக வாக்களித்தார்கள்’ என்று சொன்னார். அதேபோல் ராஜ்மோகன் எழுந்து ‘கொளத்தூரில் எங்கள் முதல்வர் ஒருமுறை பேசியதால்தான் அங்கே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்’ என்ற பேச திமுக எம்.எல்.ஏக்கள் கொதிப்படைந்தனர்.

‘சட்டசபையில் இல்லாத ஒருவரை பற்றி இங்கே ஏன் பேசுகிறீர்கள்?’ என அவர்கள் வாக்குவாதம் செய்ய சட்டசபையில் அமலி ஏற்பட்டது. அவர்களை முதலமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ஆகியோர் அமைதிப்படுத்தினர்.
அடுத்த கட்டுரையில்
இத்தாலி பிரதமர் என்னிடம் கெஞ்சினார்.. டிரம்ப் ஆணவ பேச்சு.. நான் யாரிடமும் இதுவரை கெஞ்சியதில்லை.. மெலோனி பதிலடி...