1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk is not giving two areas to dmdk

அந்த 2 தொகுதியையும் தரமுடியாது!.. கறாரா சொன்ன திமுக!.. சோகத்துடன் வெளியேறிய பிரேமலதா!..

premalatha
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்கு வாங்கிய தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது..

முக ஸ்டாலின் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை
.  தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பங்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வந்தார்.

அப்போது திமுக ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகள் தொடர்பான பட்டியலை அவர் டி.ஆர் பாலுவிடம் அவர் கொடுத்தார். அப்போது அந்த பட்டியலில் உள்ள விருகம்பாக்கம். ரிஷிவந்தியம் ஆகிய இரண்டு தொகுதிகளையும் திமுக கொடுக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது..

பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், பிரேமலதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். மேலும், விருகம்பாக்கம் தொகுதியை பார்த்தசாரதி கேட்டு பெறவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஏனெனில் 2011 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சென்று பார்த்தசாரதி வெற்றி பெற்றார். ஆனால் அந்த இரண்டு தொகுதிகளையும் தொடக்க திமுக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, பிரேமலதா சோகமாக திரும்பி சென்றதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஈரான் -இஸ்ரேல் போரால் இந்திய சுற்றுலா துறைக்கு ஜாக்பாட்.. கொட்டுது வருமானம்..!