1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk giving twenty seven seats to bjp

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27.. பாமகவுக்கு 18... தொகுதிப்பங்கீடு ஓவர்!...

eps
சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது.
வருகிற 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதிமுக நேற்று வரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்காமல் இருந்தது. அந்த கூட்டணியில் பாஜக அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஐஜேகெ  உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கிறது..

கடந்த சில நாட்களாகவே தொகுதி பங்கீடு பற்றி பேசினாலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரனன், பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசினார்கள். இந்நிலையில்தான், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மற்ற கட்சிகளின் கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்..

இறுதியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதிமுக தலைமையகத்தில் கூட்டணி உடன்படுக்கையில் கையெழுத்தாகிவிட்டது. கடந்த முறை 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு இந்த இரவுக்குள் தொகுதி பங்கீடு முடிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்,
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இப்பதான் SOP இல்லையே!.. வெளியே வாங்க!.. விஜயை கலாய்க்கும் நெட்டிசன்கள்!..