தொடர்புடைய செய்திகள்
- தனித்து களமிறங்கும் விடுதலை சிறுத்தை!.. திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை!..
- சீட் பத்தாது!.. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஜிகே வாசன்!..
- கூட்டணிக்காக சில தொகுதிகளை விட்டுக்கொடுப்போம்!.. இறங்கி வந்த பிரேமலதா!...
- கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்கக் கூட தகுதியில்லையா? கார் விவகாரத்தில் எழுந்த அவதூறுக்கு பிரேமலதா கேள்வி!
- யோசிச்சி சொல்றோம்னு சொல்லியிருக்காங்க!.. திமுகவில் உதயநிதிக்கு சீட் கிடைக்குமா?...
திமுகவில் தொகுதி பங்கீடு!.. தேமுதிகதான் கடைசி!.. ஸ்டாலின் நினைப்பது என்ன?...
விஜயகாந்தின் மறைவுக்கு பின் தேமுதிகவை பிரேமலதா வழி நடத்தி வருகிறார். தற்போது பிரேமலதா அந்த கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்பதுதான் பிரேமலதாவின் கோரிக்கையாக இருந்தது. அதை அதிமுக கொடுத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி, திமுக கொடுத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி என்கிற நிலைப்பாட்டில் இருந்தார் பிரேமலதா.. எனவே இரண்டு கட்சிகளுடன் பேசிவந்தார்.
ஆனால், பிரேமலதா கேட்ட தொகுதிகளை கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி முன்வரவில்லை எனவே திமுகவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதற்கு திமுக ஒப்புக்கொண்டது. இதையடுத்து அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தார் பிரேமலதா.
அதேநேரம் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க முடியாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் செய்தியாளிடம் பேசிய பிரேமலதா கூட்டணிக்காக சில கட்சிகளை தியாகம் செய்ய தேமுதிக தயாராக இருக்கிறது என கூறினார்.
எனவே தேமுதிகவுக்கு 10க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நாளை அறிவாலாய்த்தில் துவங்குகிறது. பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இறுதியாக தேமுதிகவை அழைக்கிறது திமுக.
அதாவது மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டால் மிச்சமிருக்கும் தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்து விடலாம் என ஸ்டாலின் கணக்கு போட்டதாக சொல்லப்படுகிறது.