விஜய் நடத்திய எம்.பி.க்கள் கூட்டம்!.. 57 எம்.பிக்கள் புறக்கணிப்பு...,
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் எம்பிகளின் கலந்தாய்வு கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துவிட்டது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கியது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சூழல்தான் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்பிகள் ஆலோசனை கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த கூட்டத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் நிராகரித்துவிட்டன. இந்த கூட்டத்தில் 20 எம்.பிக்.கள் மட்டுமே கலந்து கொண்டனர். திமுகவின் 30 எம்.பிக்கள், அதிமுக 4, பாமக 1, மக்கள் நீதி மையம் 1, தேமுதிக 1, காங்கிரஸ் 12, விசிக 2, சிபிஐ 2, சிபிஎம் 2, மதிமுக 1, ஐ.யூஎம்.எல் 1 ஆகிய எம்.பிக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.