பழனி கோவில் 100 கோடி நில மோசடி!.. கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!..
100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பழனி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிலர் தனி நபர்களுக்கு ரூ.2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது..
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு சென்றது. இது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஐன்ஸ்டீன் மணிகண்டன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சு வலி காரணமாக தற்போது அவர் திண்டுக்கல் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்திருக்கிறார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.