தமிழக மக்களுக்காக அவமானப்பட தயார்!.. சட்டமன்றத்தில் சூடு பறந்த விவாதம்...
இன்று சட்டசபை கூடிய நிலையில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. மேகதாது விவகாரம் தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அமைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடக அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது.. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால் இங்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவே தமிழ்நாடு அரசு மறுக்கிறது என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுத்தது நான்தான்.. ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்ற எண்ணத்தில் அந்த முயற்சி எடுக்கப்பட்டது.. அதில் அவமானம் ஏற்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்.. பகை நாடுகளை பேசி தீர்க்க பாக்கறாங்க.. பக்கத்து மாநிலத்தோட பேசி பார்த்தா என்னென்னுதான் நான் நினைச்சேன் என்று கூறினார்.
அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் குருவை சிறப்பு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் எல்லா அரசும் அறிவிக்கிறதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம்.. முதல்ல இரண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கணும்.. தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவசாயிகளிடம் பேசினாலே தெரிஞ்சுக்கலாம்
என்று சொன்னார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய் குருவை சாகுபடி நிவாரணம் ஏற்கனவே கொடுத்தாச்சு.. அரசியலே நாங்தான்னு சொல்ற உங்களுக்கு இது எப்படி தெரியாம போச்சுன்னு எனக்கு தெரியல.. முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடக்கும்னு தெரிஞ்சிருக்கும் என்ன பதிலளித்தார்.