1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk mla ragupathy says annan seer plan wont workout

அண்ணன் சீருக்கு ரூ.832 கோடி பத்தாது!.. சட்டசபையில் வாக்குவாதம்!...

cm vijay
தவெக ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. அதில் ரூ.812 கோடியில் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகளும் இடம் பெற்றது. அண்ணன் சீர் திட்டம் என்பது திருமண உதவி பெறும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை கொடுக்கும் திட்டமாகும். இதற்குத்தான் ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் இன்று சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி 832 கோடியில் எப்படி அண்ணன் சீர்திருத்தத்தை நீங்கள் செயல்படுத்துவீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் ‘ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. கிட்டத்தட்ட எப்படியும் இரண்டு முதல் மூன்று லட்சம் பெண்கள் வருவார்கள்.. இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து ஐயாயிரம்.. உங்கள் அதிர்ஷ்டம் தங்கம் ஒரு லட்சத்திற்கு வரட்டும்..

புடவை 10 ஆயிரம் ரூபாய்க்கு வரட்டும்.. ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை ஒரு லட்சமாக மாற்றினால் கூட அண்ணன் சீர் திட்டத்தை செயல்படுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும்.. நீங்கள் எப்படி 832 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவீர்கள்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா வாங்கினா FIR!.. உயர் நீதிமன்றம் அதிரடி..