அரிசியில் கை வச்சா நீங்க காலி!.. சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் சட்டசபையில் தவெக அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது..
சில நாட்களுக்கு முன்பு கூட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் அரிசி தரமாக இல்லை என்கிற விவாதம் எழுந்தது. அப்போது அரிசி தரமாக இல்லாததால்தான் பலரும் சாப்பிடுவதில்லை.. சில எம்.எல்.ஏக்கள் பேசினார்கள்.
ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் எங்கள் ஆட்சியில் நாங்கள் தரமான அரிசியை கொடுத்தோம்.. எங்கள் அமைச்சர்கள் சிலரே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக ரேஷன் அரிசியை சாப்பிட்டார்கள் என்றெல்லாம் கூறினார்கள்..
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தமிழ்நாடு மக்களின் பிரதானமான உணவே அரிசிதான். ஆனால் ரேஷனில் கொடுக்கப்படும் அரசி சாப்பிடும் நிலையில் இல்லை.. அதனால்தான் மக்கள் அதை சாப்பிடுவதில்லை../ தனித்து வாழக்கூடிய பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களின் உயிரை ரேஷன் அரிசிதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது..
அமைச்சர்கள் ஓட்டு கேட்பது போல ரேஷன் அரிசியை யார் யார் பயன்படுத்துகிறார்கள் என்று வீடு வீடாக சென்று கேட்டு தெரிந்து கொண்டு சட்டமன்றத்தில் பேசினால் நன்றாக இருக்கும்.. ரேஷன் அரிசியில் கைவைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்.. என எச்சரித்துள்ளார்.