நாங்களா? அவங்களா?.. முடிவு பண்ணுங்க!.. முதல்வருக்கு சி.பி.எம் சண்முகம் கேள்வி!..
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராமர் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில் எல்லா கிராமங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.. தவறினால் கடுமையான நடவடிக்கப்படும் என கூறியிருந்தார்..
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் சி.டி நிர்மல் குமார் குஜிலியம்பாறை வட்டாட்சியர் தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் அப்படி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்..
அவர் இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார்.. அந்த சுற்றறிக்கையை திரும்ப பெறப்பட்டு அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு இருக்கிறதா? அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.