1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Historic Victory for Nurses: Tamil Nadu Government Announces 2,500 Permanent Nursing Posts and New Medical Vacancies

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

செவிலியர் கோரிக்கை வெற்றி
தமிழகத்தில் பல ஆண்டுகளாக செவிலியர்கள் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்குச் சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
போராடும் செவிலியர்களின் குரலை கேட்டு, வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அவற்றை செயலாக்கும் வகையில் தமிழக வெற்றி கழக ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பின்படி, அரசு மருத்துவத்துறையில் ஆயிரக்கணக்கான புதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன.
 
இதன் ஒரு பகுதியாக, செவிலியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு உயர்தர சிறப்பு மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கில் 284 புதிய உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. 
 
வாக்களித்த மக்களுக்கும், தங்களது உரிமைகளுக்காகப் போராடிய செவிலியர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ள இந்த திட்டமானது, இது உண்மையான மக்களுக்கான ஆட்சி என்பதை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது. மருத்துவத்துறையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...