1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iran leader kameni asking unite islamic countries

இஸ்லாமிய நாடுகள் ஒன்னு சேர்ந்து அமெரிக்காவை எதிர்ப்போம்!.. ஈரான் அதிபர் கோரிக்கை...

iran america
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கிய 2வது நாள் இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்..

அதன்பின் அவரின் மகன் மொஜ்தபா கமேனி அந்த நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஒருபக்கம் ஈரானைத் தாக்கும் அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகள் உதவி வருகின்றன. அந்த நாடுகளில்தான் உள்ள ராணுவ தளங்களைத்தான் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்த கோபத்தில்தான் ஈரான் அந்த வளைகுடா நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியது.. அதில் பல எண்ணெய் கிணறு நிறுவனங்கள் சேதமடைந்தன..

போர் தொடங்கி பல மாதங்களாகியும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ஈரான் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா மிரட்டி வருகிறது.. அதேபோல் ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

இந்நிலையில்தான், இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணை வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோரிக்கை வைத்திருக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்று பட வேண்டும்.. வளைகுடா நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.. இஸ்லாமியர்களுக்கு இடையேயான பிளவு எதிரிகளுக்கு சாதகமாக அமையும்.. இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் நம் உடைமைகளை எதிரிகள் அபகரிக்க முடியாது.. மேற்காசியா, வளைகுடா நாடுகள் உண்மையான எதிரியை அடையாளம் காண வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாள வெள்ளத்தில் சிக்கி 903 பேர் மரணம்!. 149 இந்தியர்கள் மீட்பு!...