சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார் விஜய்!.. ஸ்டாலின் தாக்கு!...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது;
நான் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை.. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால், இது நிரந்தரம் இல்லை.. எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கிடைத்திருக்கும் அவகாசமாக இதை கருத வேண்டும்.. கலைஞர் சொன்ன வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது என அவர் கூறியிருந்தார்..
நாம் தோல்வியை சந்திப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதை நாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். கழகத்தில் பல மாற்றங்களை செய்ய விரும்புகிறேன்.. அது கசப்பாகத்தான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு நல்லது.. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்..
நாம் போர் அடிக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை.. மக்களுக்காக போராட்டம் செய்வதற்காக வந்திருக்கிறோம்.. தமிழக வெற்றிக் கழகம் எந்த மக்கள் பணியும் செய்யாமல் போராட்டம் செய்யாமல் ஆட்சிக்கு வந்திருக்கிறது.. முதலமைச்சர் விஜய் சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார்.. கம்பேக் கொடுப்பதில் நாம்தான் ஸ்பெஷலிஸ்ட். அதை செய்து காட்டுவோம் என அவர் பேசியிருக்கிறார்.