1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk decied to increase the count of district administrators

திமுகவில் அதிரடி மாற்றம்!.. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

mk stalin
2026 தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் திமுக செயற்குழு கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், அந்த பதவியில் ஒருவர் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேபோல், மாவட்ட செய்லாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 வயதாக குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் பத்தாயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் எனவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளருக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுவார் எனவும், சென்னையில் 40 ஆயிரம் வாக்காளருக்கு ஒரு பகுதி செயலாளர் நியமிக்கப்படுவார்
 எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும், கிளைச் செயலருக்கு 45 வயது, வட்டச் செயலாளருக்கு 50 வயது என உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் இரண்டு முறை மட்டுமே கிளைச் செயலர் மற்றும் மாவட்ட செயலர் பதவியில் வகிக்க முடியும். மாவட்ட செயலாளர் பதவியில் இருக்கும் 73 பேரில் 13 பேர் 70 வயதுக்கு மேற்பட்டோர் இருக்கிறார்கள். எனவே, 13 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.

அதோடு, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை ஒரு திமுக மாவட்டமாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளருக்கு அதிகபட்ச வயது 70, ஒன்றிய செயலருக்கு அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகர, நகர வட்ட கழக செயலர்கள் அதிகபட்ச வயது 50, கிளைச் செயலருக்கான அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!.. கொடூர கொலைகார ஜோடியை தேடும் போலீசார்!...