1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cool suresh reply to netizens about his mistake

சேகர் பாபு விவகாரம்!.. உங்க போதைக்கு நான் ஊறுகாய் இல்ல!.. கூல் சுரேஷ் காட்டம்..

cool suresh
தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். ‘வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’ என்று சொல்லி பிரபலமானவர். எல்லா திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சி சென்று அந்த படத்தை பற்றி பாசிட்டிவாக செய்தியாளர்களிடம் பேசி புரமோட் செய்வது இவரின் வழக்கம். அப்போது சுவாரஸ்யத்திற்காகவே எதையாவது பேசுவார்.

சமீபத்தில் சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபுவுக்கு அஞ்சலி செலுத்து வந்த கூல் சுரேஷ் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது வி.எஸ் பாபு என்று சொல்வதற்கு பதிலாக சேகர் பாபு அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தவறுதலாக கூறிவிட்டார்.. அதன்பின் வி.எஸ்.பாபு என்று கூறி சமாளித்தார்..

இதையடுத்து தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும், திமுகவை படிக்காதவர்களும் கூல் சுரேஷ் பேசிய வீடியோவில் சேகர் பாபு புகைப்படத்தை சேர்த்து அந்த வீடியோவை பகிர்ந்து  ட்ரோல் செய்தனர்.

இதைஎடுத்து தற்போது ஒரு வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ் ‘வி.எஸ் பாபுவுக்கு இரங்கல் தெரிவிக்க சென்றபோது தவறுதலாக சேகர் பாபு என்று கூறிவிட்டேன். அது தெரியாமல் வந்த ஒரு வார்த்தை.. அதை நீங்கள் பயன்படுத்தி சந்தோஷப்பட்டு வருகிறீர்கள்.. இது என்ன மாதிரியான மனநிலை? ஐயா சேகர்பாபு மீது எனக்கு மரியாதை இருக்கிறது.. உங்கள் போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்க வேண்டாம். இப்படி செய்யாதீர்கள்’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பிச்சாவரம் சதுப்பு நில காடுகளில் இனி பெட்ரோல், டீசல் கிடையாது.. விஜய் அரசின் அதிரடி அறிவிப்பு...