தீபம் ஏற்றும்போது விபத்து!.. தந்தை, மகள் பலி.. சென்னையில் சோகம்..
கார்த்திகை தீபத்தை ஓட்டி வீட்டில் விளக்கு ஏற்றிய போது ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் அவரின் மகள் இருவரும் மரணம் அடைந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 24ம் தேதி திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை 6 மணி அளவில் மலையின் உச்சியில் பெரிய கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே மாலை நேரங்களில் வீட்டிலும், வீட்டின் முன்பும் பெண்கள் விளக்குகளை ஏற்றி வருகிறார்கள்..
இந்நிலையில் சென்னை மாதவரம் கணபதி தோட்டம் பகுதியில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் டீசல் கேன் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதில், 2 வயது பெண் குழந்தை தன்ஷிகா சிக்கிக்கொண்டார். குழந்தையை காப்பாற்ற சென்ற அவரின் தந்தை அறிவழகனும் உடல் கருகி உயிரிழந்தார். தாய் அஞ்சனா உயிர் தப்பியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.