தவெகவுக்கு ஓட்டு விழாது!.. அதான் விஜய் தெரு தெருவாக போகிறார்.. பெ.சண்முகம் பேட்டி...
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க மேலும் ஆதரவு தேவைப்பட்டபோது அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. ஆனால், காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளைப் போல அமைச்சரவையில் இடம்பெறாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துள்ளன.
எனவே, தவெக அரசின் செயல்பாடுகளை தயக்கமின்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதோடு மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனியாக வேட்பாளரையும் நிறுத்தியிருக்கிறது..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தேர்தல் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லை. அதனால்தான் முதலமைச்சர் விஜய் தெருத்தெருவாக செல்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.. போட்டி கடுமையாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.. நம்பி வாக்களித்தோம்.. இப்படி பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்து விட்டார்கள் என்றுதான் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.