1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay inagurated polio drop camp

போலியோ சொட்டு மருந்து முகாம்!.. துவங்கிவைத்த முதல்வர் விஜய்!...

vijay
தமிழக முழுவதும் இன்று குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பாக சொட்டு மருந்து கொடுக்கப்படவிருக்கிறது.போலியோ சொட்டு மருந்து மூலம் கடந்த சில வருடங்களில் போலியோ என்பது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளது. இனி வரும் குழந்தைகளுக்கு போலியோ நோய் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை தொடங்கி வைத்தார். சில குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் சொட்டு மருந்து செலுத்தினார். சில குழந்தைகளுக்கு பொம்மையும் கொடுத்தார்..

தமிழகத்தின் இன்று மட்டும் சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனை சாவடிகள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது ,
About Writer
பாலகிருஷ்ணன்