தொடர்புடைய செய்திகள்
- ஜூன் மாதம் அறிமுகமாகும் Vivo X Fold 6.. ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சி
- மோட்டோரோலா Razr Ultra Foldable ஸ்மார்ட்போன்.. ஏப்ரல் 29ஆம் தேதி அறிமுகம்.. OLED திரை மற்றும் AI கேமரா..
- ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன்.. சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியா? எப்போது ரிலீஸ்?
- Samsung Galaxy M47 5G.. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு...!
- நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.
Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, தனது புதிய ஃபிளாக்ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Vivo X Fold 6 மாடலை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 7 மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்6 மாடல்களுக்கு போட்டியாக இந்த போன் களமிறங்கியுள்ளது.
இந்த போனில் 5,000 நிட்ஸ் பிரகாசம் கொண்ட 8.02 இன்ச் மெயின் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே, ஃபோல்டபிள் போன்களிலேயே இதுவரை இல்லாத அளவு வழங்கப்பட்டுள்ள 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி மற்றும் ஐபி58/59 தர சான்றாகும். மேலும், இதன் ஹிஞ்ச் (Hinge) 6,00,000 முறை மடிக்கக்கூடிய அளவுக்கு வலிமையானது என விவோ கூறுகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் சென்சார் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைடு மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளன. இதில் எக்ஸ்டெர்னல் லென்ஸ் எக்ஸ்டெண்டர் வசதியும் உள்ளது. மென்பொருளில் மேம்படுத்தப்பட்ட மல்டிடாஸ்கிங் மற்றும் ஏஐ (AI) அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,10,966 ஆகும். இதன் சர்வதேச அறிமுகம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Edited by Siva
