1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin sharing old info about mgr in assembly

எனக்கு தலைவர் கலைஞர்தான்!. .சட்டசபையில் சொன்னது எம்.ஜி.ஆர்!.. ஸ்டாலின் பேச்சு!..

mgr kalaignar
நடிகர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திமுகவில் பல வருடங்கள் பயணித்தவர். தனது திரைப்படங்களில் உதய சூரியன் சின்னத்தை பல காட்சிகளிலும் அவர் காட்டி மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.  பாடல் காட்சிகளிலும் கூட உதயசூரியன் என்கிற வார்த்தையை பல படங்களிலும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆருக்கு திமுகவில் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்கு பின் கட்சி நிதி தொடர்பாக எம்.ஜி.ஆர் சில கேள்விகளை எழுப்பினார். அதில் கோபமடைந்த கலைஞர் கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார்.

அதன்பின் அதிமுக என்கிற கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதன்பின் மூன்று முறை தமிழக சட்டசபையில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில்தான், இன்று நடைபெற்ற மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘திமுகவில் இருந்தபோது உதயசூரியன் சின்னத்தில்தான் முதலில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் ஒரு அதிமுக எம்.எல்.ஏ கலைஞரை ‘கருணாநிதி’ என்று கூறிய போது ஆட்சேபம் தெரிவித்த எம்.ஜி.ஆர் அவரை கலைஞர் என்று மட்டும் கூறுமாறு கூறினார். மேலும் ‘உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்.. ஆனால் எனக்கு தலைவர் கலைஞர்தான்’ என்று சொன்னவர் எம்ஜிஆர்’ என கூறியிருக்கிறார்.