1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay talk about singappen plan

ஈஸியா தப்பிவிட முடியாது!.. எல்லாம் ஃபாஸ்ட்டா இருக்கும்!.. முதல்வர் விஜய் அதிரடி!..

chief minister vijay
தமிழகத்தில் பல வருடங்களாகவே பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பலரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்தான், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் முதல்வரானவுடனே பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை என்கிற திட்டத்தை அறிவித்தார்.
 
 
இந்த திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் துவங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிங்கப்படை போலீசார் ரோந்து வருவார்கள். பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது..
 
இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய் ‘பெண்கள் குறித்து சில நிகழ்வுகளை கேட்கும் போது மனம் பதறுகிறது. கண் கலங்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போதைப்பொருள் நடமாட்டம் முக்கிய காரணம். பல வருடங்களாக கண்டுகொள்ளாததால் போதை பொருள் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என்று யாரும் நினைக்க கூடாது.
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்யப்படும். கடுமையான தண்டனைகளும் பெற்று கொடுக்கப்படும். அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து யாருக்கும் குற்றம் செய்யக்கூடது என்கிற எண்ணம் வர வேண்டும்’ என அவர் பேசினார்.