தொடர்புடைய செய்திகள்
- ஊழல் பெரும் அளவில் குறைஞ்சிருக்கு.. ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை: அன்புமணி
- என்ன செய்யப்போகிறது சிங்கப்பெண் அதிரடிப்படை?.. இன்று விஜய் துவங்கி வைக்கிறார்!..
- மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி கொடுத்துள்ளது.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...!
- தவெக பக்கம் தாவும் திமுக முக்கிய நிர்வாகிகள்!.. முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!..
- விஜய் முதல்வரான முதல் நாள் தரக்குறைவாக விமர்சனம்.. மாரிதாஸ் அதிரடி கைது...
நாளை மீண்டும் டெல்லி செல்லும் விஜய்!.. ராகுலை சந்திப்பாரா?
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். எனவே நாளையுடன் அவர் பதவியேற்று ஒரு மாதம் முடிவடையப் போகிறது.
இந்நிலையில்தான், தமிழக முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்கிறார். முதல்வர் விஜய் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அடுத்த நாள் அவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே அடுத்த நாள் காலையிலேயே அவர் சென்னை திரும்பி விட்டார்..
இந்நிலையில்தான் நாளை காலை 8 மணியளவில் முதல்வர் விஜய் தனி விமானம் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 11ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ளார். அனேகமாக நாளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
