நான் பார்த்த அதே விஜய்!.. முதல்வரை சந்தித்த சினேகா!.. வைரல் போட்டோஸ்
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார்.
திரைத்துறையிலிருந்து ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பது திரையுலகில் உள்ள பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பல திரைப்பட சங்கங்கள் ஏற்கனவே முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பல கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள்..
ஒருபக்கம் பல திரை பிரபலங்களும் முதல்வர் விஜயின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து முதல்வரானதற்கு வாழ்த்து சொல்லி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் விஜயுடன் வசீகரா மற்றும் கோட் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இன்று மாலை முதல்வர் விஜயை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரண்டு படங்களில் நான் நடித்த நடிகர் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். நான் அப்போது பார்த்த அதே எளிமை, அதே அன்போடு பழகும் விஜயை கண்டு ஆச்சர்யப்படுகிறேன் என சினேகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
