தொடர்புடைய செய்திகள்
- வெளிநாடு சென்ற முதல் தவெக அமைச்சர்.. தென்கொரியாவில் முக்கிய ஆலோசனை...!
- தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு 21 எம்.எல்.ஏக்கள்: சபாநாயகரின் அதிரடி முடிவு...!
- நாளை மீண்டும் டெல்லி செல்லும் விஜய்!.. ராகுலை சந்திப்பாரா?
- ஊழல் பெரும் அளவில் குறைஞ்சிருக்கு.. ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை: அன்புமணி
- தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ தவெகவில் ஐக்கியம்.. பிரேமலதா அதிர்ச்சியா?
தவெக ஆட்சி.. ஆனா திமுக சிஸ்டம்!.. விஜய் முன்னால் இருக்கும் சவால்!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 வருடங்களுக்குப் பின் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதுவும் கட்சி துவங்கி இரண்டு வருடங்களிலேயே விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராக மாறியிருக்கிறார். இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தையும், மக்களிடம் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. தமிழக முதல்வர் விஜய் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது அவர் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடைந்திருக்கிறது..
இந்த ஒரு மாதத்தில் இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை, மின்வெட்டு பிரச்சனை என பல புகார்களை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. ஒருபக்கம், சமூக வலைதளங்களில் திமுகவினரும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முடிந்த அளவு தவெக நிர்வாகிகளும், அமைச்சர்களும் பதில் சொல்லி வருகிறார்கள். ஆறு மாதம் வரை நாங்கள் இந்த ஆட்சியை விமர்சிக்கமாட்டோம் என சொன்ன முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று மாதத்திற்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது என்று தொடர்ந்து பேசி வருகிறார்..
தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வந்தாலும் சிஸ்டமும், அரசு அதிகாரிகளும் திமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக தவெகவினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதனால்தான் அரசில் பல துறைகளிலும் பணிபுரியும் அரசு அதிகாரிகள் தவெக அரசுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என சொல்லப்படுகிறது.. மின் வெட்டு பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடி நிர்மல்குமார் மின்சார துறையில் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கிறது. அவர்களால்தான் பிரச்சனை என கூறியிருந்தார்.
பல வருடங்களாகவே லஞ்சம், ஊழல் செய்து ஊறிப்போன பல அரசு அதிகரிகள் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் பலரும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாலும், லஞ்சம் வாங்க கூடாது, ஊழல் செய்யக்கூடாது என தவெக அரசு நெருக்கடி கொடுப்பதாலும் அரசு அதிகாரிகளின் தவெக அரசுகு சரியாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்கிறார்கள்.
இதுதான் முதல்வர் விஜய்க்கு முன்னால் இருக்கும் பெரிய சவால். இதை விஜய் சமாளித்தாலே ஆட்சியை நடத்தி விடலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதாவது இப்போது அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகள் தங்கள் ஈகோவையும், திமுக அபிமானத்தையும் விட்டுவிட்டு நாம் இனிமேல் லஞ்சம் வாங்க முடியாது.. ஊழல் செய்ய முடியாது, இனிமேல் சம்பளம் மட்டுமே வாங்கிக் கொண்டு பணிபுரிய வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்து தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்ய தொடங்கினால் மட்டுமே தவெக அரசு சிக்கல் இல்லாமல் பயணிக்கும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அது நடப்பதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.. அதுவரை சமாளிக்க வேண்டும்.. அதுவரை தவெக அரசுக்கு பல்வேறு வகைகளிலும் கெட்ட பெயர் வந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அரசு அதிகாரிகளை சமாளித்து ஆட்சியை நடத்துவதில்தான் முதல்வர் விஜயின் ஆளுமைத்திறன் இருக்கிறது.
