1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajth kumar having 4 directors in his list

அஜித் லிஸ்ட்டில் 4 இயக்குனர்கள்!.. அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?..

ajithkumar
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித்குமார். விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர். பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டாலும் இவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதன் பின்னர்தான் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.
 
கோலிவுட்டில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருக்கிறார். தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்த படம் இப்போது வரை துவங்கப்படவில்லை.
 
அஜித் 135 கோடி வரைக்கும் சம்பளம் கேட்பதால் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன் வரவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனாலும், அஜித் தன்னை அழைப்பர் என  சிறுத்தை சிவா, ஏ.எல் விஜய், வெங்கட் பிரபு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய நான்கு இயக்குனர்களும் காத்திருக்கிறார்கள். இந்த நான்கு பேரில் யாரை அஜித் அழைப்பார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஆதிக்கை கடுப்பாக்கிய அஜித்குமார்!.. இதுக்கு மேலயும் நம்பினா டைம் வேஸ்ட்!..