1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Killiyoor Election Row: TVK Candidate Challenges Congress Minister Rajeshkumar's Victory Over Alleged Malpractices

தவெக அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் புகார் மனு.. என்ன நடந்தது?

கிள்ளியூர் தேர்தல் விவகாரம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தற்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சபீன் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் புகார் மனு அளித்துள்ளார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவில், ராஜேஷ்குமார் 66,434 வாக்குகளும், சபீன் 65,123 வாக்குகளும் பெற்றனர். வெறும் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் தவெக ஆட்சியில் அமைச்சராகவும் உள்ளார்.
 
இந்நிலையில், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சபீன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நாளன்று ஒரு மையத்தில் காலை 6 மணிக்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு இயந்திரம் பழுதடைந்தது, 5 சுற்றுகளின் எண்ணிக்கை வெளிப்படையாக நடக்கவில்லை மற்றும் ஏராளமான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை போன்ற புகார்களை அவர் அடுக்கியுள்ளார். 
 
அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்தும் உரிய விளக்கம் அளிக்காமல் முடிவை அறிவித்ததால், விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிந்து இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ள சூழலில், தவெக நிர்வாகியே காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...