1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm joseph vijay called and wished anbumani ramadass

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

anbumani
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் கடந்த 6ம் தேதி நடந்து நடந்த் முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. இது தவெகவுகு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டால் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு தவெகவுக்கு தேவையில்லாமல் போய்விடும். அதோடு பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என தவெக கணக்கு போடுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது..

இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் தவெகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்காக விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறினார். தமிழக அரசியலில் புதுப்புது கூட்டணிகள் உருவாகி வரும் நிலையில் முதல்வர் விஜய் அன்புமணியிடம் இன்று தொலைபேசியில் பேசியிருப்பட்து முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..