நோட்டோவிடம் தோற்றுப்போன சீமான்!.. நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி...
சினிமா துறையிலிருந்து வந்து நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 15 வருடங்களாக தமிழகத்தில் அரசியல் செய்து வருபவர் சீமான். திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
அதேநேரம் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதால் மாற்றத்தை விரும்பியவர்கள் அவரை ஆதரிக்க துவங்கினர். இதன் காரணமாக 2024 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதேபோல், மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 1069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல்,, தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 3934 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். எனவே, 2 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழக்கவிருக்கிறது
அதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 13,293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் வேட்பாளர் 4,850 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 2656 வாக்குகளையும், CPI வேட்பாளர் 310 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 171 வாக்குகளை மட்டுமே வாங்கியிருக்கிறார். இதில் சோகம் என்னவெனில், அந்த தொகுதியில் நோட்டோவுக்கு 225 வாக்குகள் விழுந்திருக்கிறது. இதையடுத்து, நோட்டோவிடம் தோற்றுப்போன சீமான் என தவெகவினர் கிண்டலடித்து வருகிறார்கள்.