1000 வாக்குகள் கூட வாங்காத கம்யூனிஸ்ட் கட்சிகள்!.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அப்டேட்!..
தமிழகத்தை பொறுத்தவரை சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இருந்து வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று தலா ஒரு எம்.எல்.ஏ என அந்த 2 கட்சிகளுக்கு இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லாத போது சி.பி.எம், சி.பி.ஐ இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. ஆனால், அவர்கள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை
அதனாலோ என்னவோ தவெகவின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எனவே, திமுக கூட்டணியின் மனநிலையிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் இன்னும் வெளியே வரவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சி.பி.எம், சிபிஐ இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தனர். இதை தவெக ரசிக்கவில்லை.
கடந்த 6ம் தேதி இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 இந்நிலையில், மதுராந்தகத்தில் சி.பி.எம் வேட்பாளர் 866 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் 882 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதாவது ஆயிரம் வாக்குகளை கூட கம்யூனிஸ்ட்கள் பெறவில்லை.