இடைத்தேர்தலிலும் 3வது இடம்!. முடிவுக்கு வருகிறதா அதிமுக?!.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!..
அதிமுக எப்போது எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கு வந்ததோ அப்போது முதலே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 2024 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி என அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. ஆனால் அந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்ட நிலையில் அந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 6 தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற அந்த இரண்டு வேட்பாளர்களும் தவெக வேட்பாளராக விசில் சின்னத்தில் போட்டியிட்டனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கையில் 15 சுற்றுக்கள் முடிந்திருக்கும் நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 38,128 வாக்குகளும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 25,354 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 21,537 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 48,675 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 39,039 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 31,067 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதை பார்க்கும்போது அதிமுக மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது உறுதியாகிவிட்டது. மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு மவுசு குறைந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் தோற்றுப் போனது அதிமுக விசுவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.