இனிமே கூட்டணியே தேவையில்ல!.. திமுகவுக்கு இடைத்தேர்தல் கொடுத்த நம்பிக்கை...
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார். அதிமுக இரண்டாவது இடத்திற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி திமுகவை விமர்சனம் செய்ய துவங்கிய போதும் தவெகவை திமுக பெரிதாக கண்டு கொள்ளவில்லை. நாம் பதிலடி கொடுத்து விஜயை பெரிய ஆளாக்க வேண்டாம் என திமுக தலைமை நினைத்தது. அதோடு 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். மீண்டும் நாம்தான் முதலமைச்சர் என்ற நம்பிக்கையில் முக ஸ்டாலின் இருந்தார்..
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டது. திமுக எதிர்க்கட்சி ஆகிவிட்டது.அதோடு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, சிபிஎம், சிபிஐ போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுகு ஆதரவு கொடுத்து அந்தக் கூட்டணியில் இணைந்தன
. அதேபோல், மதிமுகவும் விஜய் பக்கம் சென்றுவிட்டது. இது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் கூட்டணி கட்சிகளால்தான் திமுக தொடர்ந்து பல தொகுதிகளிலும் வெற்றி பெற்று வந்தது.
அதில், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு தவெக அமைச்சரவில் இடம் கொடுக்கப்பட்டிருப்பதால் 2031 தேர்தலிலும் அந்த கட்சிகள் தவெக கூட்டணியில் இடம் பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. எனவே தவெகவுக்கு அது பெரும் பலமாகவும், திமுகவுக்கு பலவீனமாக அமையும் என அரசியல் விமர்சர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது
தற்போது வாக்கு எண்ணிக்கையில் 17 சுற்றுக்கள் முடிந்திருக்கும் நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 50,212 வாக்குகளும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 36,156 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 31,175 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 51,508 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 43,003 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 33,298 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதாவது, நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுக வென்ற இரண்டு தொகுதிகளில் தற்போது திமுக இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. இது திமுகவுக்கு நம்பிக்கை கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதாவது, கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தனித்து போட்டுயிட்டு திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இனி வரும் தேர்தலில் திமுக தனித்தே போட்டியிடும்.. கூட்டணி தேவையில்லை என திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.