சீமானுக்கு தொடர்ந்து முட்டைதானா?!.. 4வது இடத்திற்கு போன நாம் தமிழர் கட்சி!..
15 வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கியவர் சீமான். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் எதிராக கருத்துக்களை முன்வைத்து தமிழ் தேசியத்தை கையில் எடுத்து அரசியல் செய்தார். எனவே திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றை விரும்பிய இளைஞர்கள் சீமானுக்கு வாக்களித்தனர்.
2024 சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் சீமானுக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. அந்த நம்பிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியை சந்தித்தார். இது நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியதுதான் சீமானின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில், மாற்றத்தை விரும்பியவர்கள் விஜய்க்கு வாக்களித்துவிட்டனர். இந்நிலையில்தான், கடந்த 6ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரண்டு தொகுதிகளிலும் நாம் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 1069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல்,, தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 3668 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். எனவே, 2 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழக்கவிருக்கிறது.