1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai lakes to be opened at 1 noon

விடிய விடிய மழை; நிரம்பிய சென்னை ஏரிகளை திறக்க முடிவு!!

Chennai Rains
தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு நீர் திறக்கப்படுகிறது. 

 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக சென்னையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் விடாமல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. 
 
இதனிடையே இரு நாள் மழைக்கே செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு நீர் திறக்கப்படுகிறது. அதாவது, 500 கன அடி வரை உபரி நீர் திறக்கப்படுகிறது மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்றும் தங்கம் விலை உயர்வு… இரண்டே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் அதிகரிப்பு!