1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:19 IST)

நிரம்பிய மதுராந்தகம் ஏரி, 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில், செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.