1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain

தீராத மழை... இன்னும் காத்திருக்கு தமிழகத்திற்கு...!!

வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
ராமநாதபுரம் மற்றுமின்றி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.