அதி தீவிரமாக உள்ள பருவமழை: இன்னும் 2 நாட்களுக்கு மழை தான் போங்க...

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 4 டிசம்பர் 2020 (13:08 IST)
தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு புயல்கள் வரிசைக்கட்டி வந்து அதிகப்படியான மழையை பொழிந்துவிட்டது. 
 
இந்நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைதுள்ளதாகவும் இதனால் தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
அதோடு தமிழகத்தில் 11 இடங்களில் அதினகமழை பெய்துள்ளது எனவும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது எனவும் கடலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்னும் அதிகனமழையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :