1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu 12 districts to have rain

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் !

ChennaiI MD
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ரஜினி கட்சியுடன் திமுக கூட்டணியா? முக ஸ்டாலின் பேட்டி