1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:30 IST)

இனி தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

இனி தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை: முதல்வர் அதிரடி அறிவிப்பு!
தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் ரம்ஜான் உள்பட பல பண்டிகைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு பொது விடுமுறை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது 
 
இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட உள்ள வடலூரிலும், மற்ற முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பதும் முருக பக்தர்கள் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு மட்டுமன்றி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து முருக பக்தர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி கூறி வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசியலில் முருகன் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் அரசியலா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
 
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் டாக்டர் L.முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை  பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி என பாஜக பிரமுகர் நிர்மல்குமார் டுவீட் செய்துள்ளார்.