1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. director ameer replied to layola mani comment

தம்பி நீ ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருப்ப!.. லயோலா மணிக்கு நக்கலா பதில் சொன்ன அமீர்!...

layola mani
தமிழகத்தில் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில் திரைப்பட இயக்குனர் அமீர் தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அமீர் ‘ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு பக்கம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பக்கம் ஒரு கூட்டம் ஜனநாயகன் படத்தைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கிறது.. இளைஞர்கள் தியேட்டர்களில் இருக்கிறார்கள்’ என பேசினார்.

இதற்கு, விஜய்க்கு நெருக்கமானவும், தமிழ் பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத்தின் தலைவருமான லயோலா மணி அமீருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டுவந்த போது கலைஞர் கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்தார். கடந்த 5 வருடங்கள் திமுக ஆட்சியில் இருந்தபோது அமீர் ஏன் வாயை திறக்கவில்லை?.. நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என மக்களை ஏமாற்றி பொய்யாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவை அவர் ஏன் விமர்சிக்கவில்லை?.. திமுக ஆட்சியில் அவருக்கு நிறைய அணுகூலன்கள் இருந்தது.. போதைப்பொருள் கடத்தும் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த அமீர் ‘தம்பி மணி.. சர்க்கார் படம் வந்தபோது விஜய்க்கு எதிர்ப்பு இருந்தபோது அவருக்கு முதல் ஆதரவா நின்னது நான்தான்.. அப்ப நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தீங்க? ஸ்கூலுக்கு போனீங்களா இல்ல கட் அடிச்சிட்டு வேற எங்கேயாவது போனீங்களா? எச். ராஜா ‘ஜோசப் விஜய்’ என்று சொன்னபோது ‘அவர் ஜோசப் விஜயா இருந்தா என்ன? விஜய் முகமதுவா இருந்தா என்ன?’ என முதல் ஆளாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய்க்கு ஆதரவா கொடுத்தவன் நான்தான்.. அப்ப அந்த தம்பி எங்க இருந்தாருன்னு கேளுங்க.. ஏதாவது வீட்டு வாசலில் விளையாடிட்டு இருந்திருப்பாரு’  என பதில் சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டுக்காவல்!.. காவல்துறை அதிரடி..