சென்னையில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுயவிவரப் பதிவு ஜூலை 17 முதல் தொடக்கம்!
சென்னையில் 2027ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையவழியில் தாங்களாகவே பதிவு செய்யும் 'சுயவிவரப் பதிவு' முறை ஜூலை 17ஆம் தேதி தொடங்குகிறது. இத்திட்டம் ஜூலை 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, அரசு வழங்கியுள்ள பிரத்யேக இணையதளம் மூலம் தங்களின் குடும்ப விவரங்களை எளிமையாகவும், துல்லியமாகவும் இந்த காலகட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஒரு மாத காலத்தில் வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டு வசதி குறித்த விரிவான கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறும்.
சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தடையின்றி துல்லியமாக நடப்பதை உறுதி செய்ய, பொதுமக்கள் இந்த சுயவிவர பதிவு மற்றும் கள ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Siva
