1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Google Confirms Price Increases for All Future Pixel Phones Due to Rising RAM Costs

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் விலை தாறுமாறாக உயரும்.. 100 டாலர் வரை விலை உயர வாய்ப்பு...

தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் நிறுவனத்தின் பிக்சல்  ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலக அளவில் RAM மற்றும் மெமரி பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால் ரேம் தேவை அதிகரித்து, கடந்த ஆண்டு 2.80 டாலராக இருந்த ஒரு ஜிகேபைட் ரேமின் விலை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் பிக்சல் 11 சீரிஸ் மற்றும் பிக்சல் 10ஏ உள்ளிட்ட அனைத்துப் பிக்சல் போன்களிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
வரவிருக்கும் பிக்சல் 11 போன்களின் அடிப்படை மாடல் வழக்கமான விலையை விட சுமாராக 100 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், நுகர்வோர் மீது முழுச் சுமையையும் திணிக்காமல், ஆண்ட்ராய்டு மென்பொருளை மேம்படுத்தி குறைந்த ரேமிலும் சிறந்த செயல் திறனை வழங்கக் கூகுள் முயன்று வருகிறது. 
 
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற உள்ள பிக்சல் 11 அறிமுக விழாவில் இது குறித்த இறுதி விலைப் பட்டியல் மற்றும் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கருவின் பாலினத்தை சொன்ன விவகாரம்!. 8 வாரத்திற்குள் நடவடிக்கை!.. இர்ஃபான் சிக்குவாரா?..