1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Flying Train Services to Merge with Metro: Massive Rs 4,500 Crore Makeover for Beach-Parangimalai Route

மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!

சென்னை பறக்கும் ரயில்
சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளுள் ஒன்றான MRTS பறக்கும் ரயில் வழித்தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதல் இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒப்புதல் கிடைத்தவுடன், சுமார் 4,500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த வழித்தடத்தை மெட்ரோ தரத்திற்கு நிகராக நவீனமயமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும். எம்.ஆர்.டி.எஸ் தண்டவாளங்களுக்கு ஏற்ப பிரத்யேக மெட்ரோ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும். 
 
ரயில் இயக்கத்தை முறைப்படுத்த சிக்னல் சிஸ்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும், வருவாயை பெருக்கும் நோக்கில் நவீன வணிக வளாகங்கள் கட்டப்படும்.
 
இதன் மூலம் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான 18 நிலையங்கள் மற்றும் வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 3 நிலையங்கள் என மொத்தம் 21 ரயில் நிலையங்கள் மெட்ரோ தரத்திற்கு இணையாக முற்றிலும் புதுப்பிக்கப்படும். இந்த ஒட்டுமொத்த மேம்பாட்டுப் பணிகளையும் 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
அதுவரை, பணிகள் நடக்கும் காலத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்போதைய பழைய கட்டண முறையிலேயே பறக்கும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!