1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court order on the action on irfan releasing gender

கருவின் பாலினத்தை சொன்ன விவகாரம்!. 8 வாரத்திற்குள் நடவடிக்கை!.. இர்ஃபான் சிக்குவாரா?..

irfan
யூடியூப்பில் சமையல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாமல் உலகில் உள்ள பல ஹோட்டலுக்கும் சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை பற்றி வீடியோக்களை வெளியிட்டு இவர் பிரபலமானார்.

இதன் மூலம் லட்சக்கணக்கில் அவருக்கு வருமானமும் கிடைத்து. ஒருபக்கம், பிரபலங்களை அவர் பேட்டியும் எடுத்து வந்தார். பல பிரபலங்களின் திருமண விழாக்களிலும் இர்ஃபான் கலந்து கொண்டார். அந்நிலையில்தான், அவரின் மனைவி கர்ப்பமடைந்தபோது துபாய்க்கு சென்று கருவின் பாலினத்தை கண்டுபிடித்து அதை இர்ஃபான் வீடியோவாக வெளியிட்டார்.

இந்திய சட்டப்படி கருவின் பாலினத்தை வெளியே சொல்வது தவறு என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இந்த வழக்கை கிடப்பில் போடப்பட்டது..

இந்நிலையில்தான், இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் இர்பானின் ஃபைலை மீண்டும் தூசி தட்டியுள்ளனர். விரைல் இர்ஃபானுக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இதை செய்யலனா மீண்டும் போராட்டம்!.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை...